ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இரு தங்கப் பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இரு தங்கப் பதக்கங்கள்

ஜப்பானின் ஐச்சி - நகோயா நகரில் நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை இன்று (23) இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

இலங்கை வீராங்கனை ஜனனி தனஞ்சனா விக்கிரமசிங்க, பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில் 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேவேளை, ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (T46) இலங்கை வீரர் பிரதீப் சோமசிறி சிறப்பாகப் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

 

2026 ஆசிய பரா விளையாட்டுப் போட்டி

இப்போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், பிலிப்பைன்ஸ் வீரர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இரு தங்கப் பதக்கங்கள் | Double Gold For Sri Lanka At 2026 Asian Para Games

இரு வீரர்களின் வெற்றிகளும் 2026 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பதக்க எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளன.