நுவரெலியாவில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா (Nuwara eliya) - அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் நேற்று (05.05.2024) மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு | Decomposing Body Of Man Recovered In Nuwara Eliya

மேலும் இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.