கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை : துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல்

கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை : துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில்  இலங்கை துறைமுக அதிகாரசபையானது(Sri Lanka Ports Authority) கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், கொள்கலன் நடவடிக்கைகளின் அளவு 441,032 ஆக இருந்தது.

இந்த ஆண்டு இத்தொகையானது,  652766 ஆக பதிவாகியுள்ளதுடன் இது 48 சதவீதம் வளர்ச்சியாகும்.

இந்நிலையில், வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 582403 ஆக பதிவாகியுள்ளது.

இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49.81 வீதமமென்றும் தெரிவிக்கப்படுகிறது.