வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

காலி மாவட்டம் - உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று (30-04-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் திருமணமான 24 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ தினத்தன்று பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, வீட்டிற்கு சென்ற பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரின் தலையில் கத்தியால் பலமாக தாக்கியுள்ளார்.

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle

காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.