கொரோனா தொற்று: மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கொரோனா தொற்று: மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 2317 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2810 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 482 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.