கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்..!

கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்..!

கிளிநொச்சி வாழ் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக நாளாந்தம் அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் நீர் பாவனை தினமும் அதிகரித்துச் செல்கிறது அவ்வாறு அதிகரித்துச் செல்லும் அளவுக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல் | National Water Supply Drainage Board Kilinochchiகிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு கொள்ளளவை விட அதிக நீர் பாவனையும் தேவையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இதன் காரணமாக தினமும் தேவையான அளவு நீரை பொது மக்களுக்கு வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே பொது மக்கள் இந் நிலைமையினை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமாயின் வரும் நாட்களில் நீர் விநியோக நடவடிக்கைகள் சுழற்சி முறையில் வழங்கும் நிலைமை ஏற்படும் என வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.