துறவரத்துக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மாயம்

துறவரத்துக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மாயம்

களுத்துறை பகுதியில் துறவரத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி குறித்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

14 வயதுடைய இந்த சிறுமி பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கடந்த 25ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் தெரிவித்தார்.

துறவரத்துக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மாயம் | Mayam Girl Left Home Saying She Going To Monasteryகுறித்த தாய் பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பேருவளை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.