கொழும்பில் 8 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கொழும்பில் 8 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கொழும்பு - மகரகம பகுதியில் 8 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர், மகரகம பகுதியில் வைத்து இன்று (27.04.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடமிருந்து சுமார் 8 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

a-man-arrested-in-colombo-with-8-kg-drugs-மேலும், குறித்த போதை பொருளின் பெறுமதி 160 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.