களனியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

களனியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

களனி (Kelaniya) பகுதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் களனி, பொல்ஹேன, சீவலி விளையாட்டரங்கில் நேற்று (25.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காதல் விவகாரம் காரணமாக இந்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

young-man-committed-wrong-decision

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களனிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.