வசந்த காலத்தில் இவர்களால் தொல்லை; மக்கள் விசனம்

வசந்த காலத்தில் இவர்களால் தொல்லை; மக்கள் விசனம்

நுவரெலியாவில் வசந்தகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சுற்றுலாவாசிகள் பொதுமக்கள் என  பல்லரும் நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக ஏப்ரல் மாத வசந்த காலத்தில் தினமும் பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

வசந்த காலத்தில் இவர்களால் தொல்லை; மக்கள் விசனம் | Harassment By These In Spring People Are Tiredஇந் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் , ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டு தொடர்ந்து காணப்படுகின்றது.

இவர்கள் ஒரு குழுவாகவே வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து குறித்த பெண்கள் கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றனர் , அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும் , பாலூட்டும் தாய்மார்களாகவும், சிறுமிகளும் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வசந்த காலத்தில் இவர்களால் தொல்லை; மக்கள் விசனம் | Harassment By These In Spring People Are Tiredஊதுபத்தி விற்பனை செய்யும் போது ஊதுபத்தியினை பார்த்துவிட்டு வாங்குவதற்கு தவரும் பட்சத்தில் பொது மக்களையும் சுற்றுலா பயணிகளையும் தகாத வார்த்தைகளால் அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் உடலில் உரிமை இன்றி தொடுவதும் அவர்களையும் அவதூறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இது தொடர்பில் நுவரெலியா மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது