கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, வடமத்திய, வடமேல்,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Alert Rain Or Thundershowers

இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.