புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பலத்த பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

நாடுதழுவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட சுமார் 4,500 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

தவிரவும், விழாக்காலங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பலத்த பாதுகாப்பு | 15000 Security Deployed New Year Celebrations 2024

அதன்படி, சுமார் 14,000 காவல்துறையினரும், கிட்டத்தட்ட 500 விசேட அதிரடிப்படையினரும், 400 இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 15,806 சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உதவுவார்கள் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.