நல்லூரில் அதிகளவு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை?

நல்லூரில் அதிகளவு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை?

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் திருவிழாவில், கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்த வாரம் மீளப்பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் மூன்றாம் திகதி தொடக்கம் பொலிஸார் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

ஆகையினால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், ஒரு வார காலத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.