ஆண் நபரொருவடன் ஹோட்டலுக்கு சென்ற மலையக யுவதி... மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆண் நபரொருவடன் ஹோட்டலுக்கு சென்ற மலையக யுவதி... மர்மமான முறையில் உயிரிழப்பு!

அவிசாவளை - மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதியில் நேற்றையதினம் (10-04-2024) மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஆண் நபரொருடன் ஹோட்டலுக்கு சென்ற மலையக யுவதி... மர்மமான முறையில் உயிரிழப்பு! | Mountain Girl Went To A Hotel With A Man Dead

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த யுவதி நேற்று மாலை ஆண் நபரொருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

ஆண் நபரொருடன் ஹோட்டலுக்கு சென்ற மலையக யுவதி... மர்மமான முறையில் உயிரிழப்பு! | Mountain Girl Went To A Hotel With A Man Dead

பின்னர் சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து சடலம் பரிசோதனைக்களுக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.