நாட்டுக்கான கடமையை செய்து விட்டு மரணமடைந்த 94 வயது மூதாட்டி! அப்படி என்ன செய்தார்..

நாட்டுக்கான கடமையை செய்து விட்டு மரணமடைந்த 94 வயது மூதாட்டி! அப்படி என்ன செய்தார்..

இந்தியாவில் நடைபெற்றவுள்ள மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

நாட்டுக்கான கடமையை செய்து விட்டு மரணமடைந்த 94 வயது மூதாட்டி! அப்படி என்ன செய்தார்? | 94 Year Old Woman Died After Voting Tamil Nadu

இதன்படி, முதலில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே மக்களவை தேர்தளுக்கு வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியது.

நாட்டுக்கான கடமையை செய்து விட்டு மரணமடைந்த 94 வயது மூதாட்டி! அப்படி என்ன செய்தார்? | 94 Year Old Woman Died After Voting Tamil Nadu

தமிழகத்தில் உள்ள திருப்பூரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கினை அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சில தினங்களுக்கு முன் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் 94 வயதான வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் வீட்டிற்கும் அதிகாரிகள் சென்றனர்.

நாட்டுக்கான கடமையை செய்து விட்டு மரணமடைந்த 94 வயது மூதாட்டி! அப்படி என்ன செய்தார்? | 94 Year Old Woman Died After Voting Tamil Nadu

அவர்கள் கொண்டு வந்த தபால் வாக்கு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார்.

பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயம்மாள் உயிரிழந்துள்ளார். 94 வயதிலும் தனது ஜனநாயக கடமையை முடித்து மூதாட்டி உயிரை விட்டது பேசப்பட்டு வருகிறது.