சர்ச்சையை கிளப்பிய மைத்திரி: கோரிக்கையை நிராகரித்த இந்தியா

சர்ச்சையை கிளப்பிய மைத்திரி: கோரிக்கையை நிராகரித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக மைத்திரி வாக்குமூலம் வழங்கியதாக அவர் அதிபராக  இருந்த காலத்தில் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த சந்திப்பிற்கு முன்னாள் அதிபரான மைத்திரி கால அவகாசம் கோரியிருந்தார்.

எனினும் அந்த கோரிக்கையை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய மைத்திரி: கோரிக்கையை நிராகரித்த இந்தியா | Indian High Commission Rejected Maithri S Request

அதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயல்படுவதற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.