இலங்கையில் உள்ள மதுபானக் கடைகள் - இறைச்சிக் கடைகளுக்கு 3 நாட்கள் பூட்டு!

இலங்கையில் உள்ள மதுபானக் கடைகள் - இறைச்சிக் கடைகளுக்கு 3 நாட்கள் பூட்டு!

இலங்கையில் தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள மதுபானக் கடைகள் - இறைச்சிக் கடைகளுக்கு 3 நாட்கள் பூட்டு! | Liquor Shops Meat Shops 3 Days Closed Vesak Moon

மதுக்கடைகள் மூடப்படுவதுடன், விலங்குகள் வெட்டப்படும் இடங்கள், இறைச்சி மற்றும் இறைச்சியை கசாப்பு செய்யும் இடங்களும் மூடப்படவுள்ளன.

இந்த முறை தேசிய வெசாக் வாரம் மே 21 முதல் 27 வரை மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.