அரச பேருந்தில் தொடரும் மோசடி: நடத்துனர்கள் பலர் பணி இடைநிறுத்தம்

அரச பேருந்தில் தொடரும் மோசடி: நடத்துனர்கள் பலர் பணி இடைநிறுத்தம்

சில பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அடிக்கடி 30, 50 ரூபாய் கொடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு சில நடத்துனர்கள் பயண சீட்டு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

பேருந்துகளில் சீரற்ற நடமாடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது சில அரச பேருந்து டிப்போக்களின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து மூன்று இலட்சம் ரூபாவாக உயர்வதாகவும் கூறியுள்ளார்.

அரச பேருந்தில் தொடரும் மோசடி: நடத்துனர்கள் பலர் பணி இடைநிறுத்தம் | Conductors Suspension Of Work For One Week

நாடளாவிய ரீதியில் 107 அரச டிப்போக்கள் உள்ளதாகவும், மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள டிப்போக்களில் பணிபுரியும் சில ஊழியர்களே இந்த மோசடியை பெரும்பாலும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பயணம் தொடர்பான பணத்தை கொடுத்து நடத்துனரிடம் தவறாமல் பயணசீட்டை கேட்க வேண்டும் என்றும், அரச பேருந்துகளில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.