ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாப்படப்படுவது ஏன்..
முட்டாள்கள் தினத்துக்கான ஆணிவேர் எங்கிருந்து தொடங்கியது என இப்போது வரை சரியாக தெரியவில்லை என்றாலும், இந்த நாளில் ஒருவருக்கொருவர் ஏமாற்றி கொள்வது என்பது உலக முழுவதும் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 1ஆம் திகதி உலகம் முழுவதும் ஆண்டுதோறும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பிராங்குகள் செய்து ஏமாற்றிக்கொள்வதும், ஜோக்களை பரிமாறுவதும் நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களை குறுப்புத்தனமாக கவிழ்க்கும் ஐடியாக்கள் செயல்படுத்தும் இருந்து வருகிறார்கள்.
பிராங்குகளை செய்து மற்றவர்களை முட்டாள் ஆக்குவதால் இந்த நாள் முட்டாள்கள் நாள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாள் உருவானது பற்றி சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், 1582இல் போப் ஆண்டவராக இருந்த 13ஆம் கிரிகோரி, வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நாள்காட்டியை மாற்றியமைத்தார்.
கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்பட்ட இந்த காலண்டரில் புத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி என்று இருந்தது.
புதிய புத்தாண்டு நாளை ஏற்றக்கொண்டவர்கள் ஜனவரி 1ஆம் திகதி புத்தாண்டை கொண்டாட, ஏற்க மறுத்தவர்கள் அதற்கு முன்பு இருந்த ஏப்ரல் 1ஆம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுவதை தொடர்ந்தனர்.
ஆனால் புதிய தேதியை பின்பற்றுவோர் அதிகமாகி, பழைய திகதியை பின்னபற்றுவோர் ஏமாளி, முட்டாள் என கேலி செய்ய தொடங்கினர். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக பரிசுகளை வழங்கினர்.
இதுதான் முட்டாள்கள் தினம் கொண்டாடுவதற்கான காரணங்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. மற்றொரு நிகழ்வாக ரோமானிய திருவிழாவான ஹிலாரியா, (லத்தீன் மொழியில் மகிழ்ச்சிகரமான) கொண்டாட்டத்தை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள்.
இந்த நாளில் ரோமானிய மக்கள் மாறுவேடங்கள் அணிந்து ஒருவருக்கொருவர் கேலி செய்தும், ஏமாற்றியும் விளையாடி கொள்கிறார்கள்.
அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 1ஆம் திகதி ஏப்ரல் மீன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆறுகளில் மீன்கள் அதிகம் இருக்கும் நிலையில், பேப்பர் போன்று மீன் செய்து அதை மற்றவர்களின் முதுகில் ஒட்டி ஏமாற்றி சிறுவர்கள் கிண்டலடித்து ஜாலி செய்வார்கள்.
வட துருவத்தின் வசத்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த நாளிலிருந்து அங்கும் பகலும் இரவும் சமமாக இருக்கும் என கூறப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டில் பிரபலமான இந்த நாளுக்கு பல்வேறு விதமான வரலாற்று சான்றுகள் இருந்தாலும், ஏமாற்றுவதென்பது பொதுவான விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நாளில் யாரையும் புண்படுத்தாதவாறும், பாதிக்காதவாறும் ஜோக்குகள் சொல்வது, புரளி கிளப்புவது, குறும்பாக விளையாடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
பலரும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்ற நினைவுக்கு வருவதற்கு முன்பு அவர்களை நன்கு பிராங்க் செய்து கலட்டா பண்ணலாம்.
அதேசமயம் குறும்புத்தனத்தையும், வேடிக்கையும் வெளிப்படுத்தும் நாளாக முட்டாள்கள் நாள் இருப்பதால் வரம்பு மீறாமல் தீங்கு விளைவிக்காமல் பிராங்குகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.