சகோதரனை கொடூரமாக கொலை செய்த இளைய சகோதரன்! இலங்கையில் பகீர் சம்பவம்

சகோதரனை கொடூரமாக கொலை செய்த இளைய சகோதரன்! இலங்கையில் பகீர் சம்பவம்

கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல - குடாகம பகுதியில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (30-03-2024) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரனை கொடூரமாக கொலை செய்த இளைய சகோதரன்! இலங்கையில் பகீர் சம்பவம் | Ruwanwella Younger Brother Murdered His Brother

குறித்த சம்பவத்தில் குடாகம, அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இறந்தவர் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ​​அவரது தம்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் கூரிய ஆயுதத்தால் தனது மூத்த சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரனை கொடூரமாக கொலை செய்த இளைய சகோதரன்! இலங்கையில் பகீர் சம்பவம் | Ruwanwella Younger Brother Murdered His Brotherஇந்த கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.