Linked in அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்
வணிகம் மற்றும் வேலை வாய்ப்புக்களை மையமாகக் கொண்ட சமூக ஊடகத்தளமான லிங்க்ட் - இன் இல் தற்போது குறுகிய வடிவ வீடியோவை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் short videos அம்சத்தை லிங்க்ட் - இன் தனது தளத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்கள் வீடியோ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் டிக்டொக் இல் காணப்படுவதைப் போல் குறுகிய வீடியோக்களுக்கான ஆப்ஷன் இருக்கும்.
குறித்த வீடியோக்களை விரும்புவதன் மூலமும் கருத்து தெரிவிப்பதன் மூலமும் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலமும் பயனர்கள் உள்ளடக்கத்தில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அம்சமானது, தற்போது ஆரம்பக்கட்ட சோதனையில் உள்ளது.