காது நோய்க்கு சிகிற்சைக்கு சென்றவர் உயிரிழப்பு; தடுப்பூசி காரணமா..

காது நோய்க்கு சிகிற்சைக்கு சென்றவர் உயிரிழப்பு; தடுப்பூசி காரணமா..

காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் நோயாளிக்கு செலத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட உபாதை காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளார்.

காது நோய்க்கு சிகிற்சைக்கு சென்றவர் உயிரிழப்பு; தடுப்பூசி காரணமா? | Treatment For An Ear Disease Died Ragama Hospital

சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஆவார்,. இவர் அண்மையில் காதில் ஏற்பட்ட நோய்க்காக ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .

காதில் ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சைக்காக 11 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும் 12 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உயிரிழந்த நோயாளிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி குறித்த விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

நோயாளிக்கு ஏற்றப்பட்ட குறித்த தடுப்பூசி ஹொரணையில் அமைந்துள்ள மருத்துவ நிறுவனமொன்றில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது .