கத்தரிகோலால் பறிபோன உயிர்

கத்தரிகோலால் பறிபோன உயிர்

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார். உயிரிழந்தவருக்கும் சந்தேக நபரொவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதில் சந்தேக நபர், சந்தேகநபர் கத்தரிக்கோலால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தரிகோலால் பறிபோன உயிர் | Man Stabbed To Death With Scissors

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.