துபாய் வீட்டில் செட்டில் ஆகும் அஜித்..! ஏன் நடிகர்கள் துபாயில் செட்டிலாகிறார்கள் தெரியுமா..

துபாய் வீட்டில் செட்டில் ஆகும் அஜித்..! ஏன் நடிகர்கள் துபாயில் செட்டிலாகிறார்கள் தெரியுமா..

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் கமலஹாசனுக்கு அடுத்து தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு திரை உலகில் தங்களுக்கு என சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் இவர்கள் நடிப்பை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.


எந்த ஒரு திரை பின்புறத்தையும் கொண்டு இருக்காமல் தன்னுடைய விடா முயற்சியால் உழைத்து திரை உலகில் தற்போது தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் தல அஜித் நம்மை விட்டு துபாயில் செட்டில் ஆகிறாரா.

ரசிகர்களால் அன்போடு தல அஜித் என்று அழைக்கப்படக்கூடிய இவரது ஆரம்ப திரைப்படங்கள் போதிய அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த காதல் கோட்டை, வாலி போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இதனை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பில்லா 2- ல் பக்காவாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக முன்னேறினார்.

எப்போதும் எதார்த்தத்தை விரும்பக் கூடிய இவர் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸில் அதீத கவனத்தை செலுத்தி வரும் இவர் அடிக்கடி பைக் ரைட் செல்வதை விருப்பமாக கொண்டிருக்கிறார்.


மிகப்பெரிய ரசிகர்கள் விரும்பும் ஹீரோ என்றாலும் எல்லோரையும் ஒன்றாக நடத்தக்கூடிய இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணியை அவர் கையாலேயே செய்து அனைவரோடும் பகிர்ந்து உண்ணுவார்.

அப்படிப்பட்ட நடிகர் அஜித் தமிழகத்தில் செட்டிலாகாமல் துபாய் வீட்டில் செட்டிலாக இருக்கக்கூடிய விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீப காலமாகவே துபாயில் செட்டில் ஆகும் திரை பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் துபாயில் முதலீடுகளை செய்து குடியுரிமையைப் பெற்று அங்கேயே செட்டிலாகும் பழக்கத்தை அதிகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பழக்கம் தற்போது கோலிவுட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பல்வேறு தமிழ் சினிமா நடிகர்கள் துபாயில் முதலீடு செய்து குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆகும் முடிவில் இருக்கிறார்கள்.


அந்தவரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித்குமார் துபாயில் செட்டிலாக இருக்கிறார்.

அது சரி ஏன் எல்லோரும் துபாய் போன்ற ஒரு நாட்டில் சென்று குடியேறுகிறார்கள் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? இல்லை உலகில் வேறு ஊரே கிடையாதா? என்று பலரும் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். இதற்கான விடையைத் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

துபாய் நாட்டில் தூசி புழுதி போன்ற விஷயங்கள் கிடையாது. நம் ஊரில் சாலையோரம் 10 நிமிடம் நடந்து சென்றாலே எந்த அளவு தூசி துகள்கள் பறக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும், சாலையோரம் குப்பைகள் இல்லாமல் இருந்தால் கூட அந்த இடத்தில் எந்த அளவுக்கு காற்று மாசுபட்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.


எனவே நம் பகுதியில் எந்த அளவிற்கு தூசி தும்பு நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆனால் துபாயில் எப்படிப்பட்ட பிரச்சனையே கிடையாது. மேலும் அங்கு தூசி, தும்பு பறக்கும் அளவுக்கு எதையாவது செய்தால் அவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

இதன் காரணமாகவே நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் துபாயில் சென்று செட்டிலாக விரும்புகிறார்கள் என்று கூறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.