திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

திருகோணமலயில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் இன்று (21-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்! | Youth Died In A Motorcycle Accident In Trincomalee

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்! | Youth Died In A Motorcycle Accident In Trincomalee

மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் திருகோணமலைக்கு வந்து, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் மட்டக்களப்பு, செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த 22 வயதான ஜெகதீஸ்வரன் மதுசாந் வயது என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.