யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
யாழில் இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் சுகந்தன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கூடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குடும்பஸ்தரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.