யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விமான சேவையானது இந்த வருட நடுப்பகுதியல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏயார்லைன்ஸ் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் குழு ஒன்றும் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் விமான சேவையினை இந்த ஆண்டு ஜுன் மாதமளவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பலாவி விமான நிலைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய தகவல் | Chennai To Jaffna Flight Booking Indigo Airlines