வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் மக்களிடம் மீளக் கையளிப்பு..!

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் மக்களிடம் மீளக் கையளிப்பு..!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (10.03.2024) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது.

இதில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்களும், கிளிநொச்சி மாவடத்தில் சுமார் 40 ஏக்கர் காணி நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியும் ஆகிய சாகல ரட்ணநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு காணி உரியவர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் மக்களிடம் மீளக் கையளிப்பு | Restitution Lands Held By Army People

மேலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரட்ன, ஜனாதிபதி செயலக வடக்கு மாகாண இணைப்பாளர் எல் இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படையினர்கள், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery