கொவிட் 19 தொற்றே இதுவரையில் அறிவிக்கப்பட்ட மிக கடுமையான அவசரகால நிலை

கொவிட் 19 தொற்றே இதுவரையில் அறிவிக்கப்பட்ட மிக கடுமையான அவசரகால நிலை

கொவிட் 19 தொற்றானது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுவரை சர்வதேச ரீதியாக அறிவிக்கப்பட்ட மிக கடுமையான சுகாதார அவசரகால நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் Tedros Adhanom Ghebreyesus இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எபோலா வைரஸ்சுக்கா இரண்டு முறையும், சிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகியனவற்றுக்காக 5 தடவைகள் இதுவரை சர்வதேச ரீதியாக சுகாதார அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கொவிட் 19 தொற்றானது சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு சர்வதேச ரீதியாக உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையை அறிவிக்கும் போது சீனாவுக்கு வெளியில் 100க்கும் குறைவான தொற்றுறுதியானவர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எனினும் எந்தவித உயிரிழப்புக்களும் பதிவாகியிருக்கவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 6 இலட்சத்து 55 ஆயிரத்து 856 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஒரு கோடியே 2 இலட்சத்து 17 ஆயிரத்து 289 பேர் சர்வதேச ரீதியாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.