![](https://yarlosai.com/storage/app/news/06ee6bbd65e8cc3451faa36eddee05d4.jpg)
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் விபத்து: ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம் (03.01.2024) தாவடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.