யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்

யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்

கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் நாளையதினம்(02) காலை 8 மணி தொடக்கம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  நடைபெறவுள்ளது. 

இதில் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண்பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .