உலகில் மழையே பெய்யாத கிராமம்

உலகில் மழையே பெய்யாத கிராமம்

உலகத்துக்கே பொதுவானது மழை என்பார்கள். ஆனால், மழையே பெய்யாத ஒரு கிராமமும் இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அதிசயம்தான்.

மேற்கு ஆசியாவில், ஏமன் நாட்டின் தலைநகரான சீனாவில் அல்-ஹுதைப் என்றொரு கிராமம் உண்டு. கடும் வறட்சி கொண்ட இந்த கிராமத்தில் இதுவரை மழையே பெய்ததில்லையாம்.

அல்-ஹுதைப் கிராமம் தரை மட்டத்திலிருந்து 3,200 மீட்டர் உயரத்தில், சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் இருக்கிறது.

அதிக உயரத்தில் இருந்தாலும், அந்த இடம் எப்போதும் பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் பனியும் குளிருமாகவுமே இருக்கும்.

உலகில் மழையே பெய்யாத கிராமம் | A Village Where No Rain Falls In The World

ஆனால், மழைக்கு வாய்ப்பேயில்லை. இந்த கிராமத்தில் நீர் நிலைகள் போதுமானதாக இல்லை. இதனாலும் இந்த பகுதியில் மழை பெய்யாது என கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, மழை பெய்யாததற்கு இந்த நிலப்பகுதிக்கு மேலே மேகங்கள் சூழாததும் ஒரு காரணம்.

மேகப் படுக்கைக்கு மேல்தான் ஒரு கிராமமே இருப்பது போன்ற தோற்றம் சில வேளைகளில் தென்படும்.

சாதாரணமாக மழை மேகங்கள், சமவெளியிலிருந்து 2,000 மீட்டர் உயரத்துக்குள் சூழும்.

உலகில் மழையே பெய்யாத கிராமம் | A Village Where No Rain Falls In The World

ஆனால், இந்த கிராமத்தின் உயரம் 2,000 மீட்டருக்கும் அதிகம் என்பதால் இங்கு மேகங்கள் சூழ வழியில்லை.

அதனால் மேகங்களிலிருந்து வரக்கூடிய மழையும் இந்த நிலத்தில் விழ சாத்தியமில்லை என்பது அறிவியல் உண்மை.