
யாழில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு!
யாழ்ப்பாணம், உரும்பிராய்ப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.
இதன்போது சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது-66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.
மேலும், சடலம் தொடர்பான இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.