கைதானவரின் தொலைபேசியை விற்ற பொலிஸ்காரர்

கைதானவரின் தொலைபேசியை விற்ற பொலிஸ்காரர்

அம்பாறை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை விற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை பொலிஸ் உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவரின் தொலைபேசியை விற்ற பொலிஸ்காரர் | The Policeman Who Sold The Phone Of The Arrested

சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.