இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அமெரிக்கா தீர்மானம்

இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அமெரிக்கா தீர்மானம்

இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி Doland Lu குறிப்பிட்டுள்ளார்.

விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘king air’ விமானமொன்று வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானம் இந்த வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இதற்கு முன்னர் இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினருக்கு படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.