களமிறங்கும் நடிகர் விஜய்

களமிறங்கும் நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி விரிவாக்கம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.