தவறை திருத்தினார் நடிகர் விஜய்

தவறை திருத்தினார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் தன் கட்சி பெயரில் உத்தியோகபூர்வமாக திருத்தம் செய்துள்ளார்.

அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய், இம்மாதம் 2ம் திகதி, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து, அதன் பெயரை முறைப்படி அறிவித்தார்.

கட்சி பெயரை அறிவித்ததும். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயர் வர வேண்டும். தமிழ் இலக்கணப்படி, ‘க்’ விடுபட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, கட்சிப் பெயரில் ‘க்’ சேர்க்க விஜய் முடிவு செய்துள்ளார். இவ்விபரத்தை தேர்தல் ஆணையத்திடமும் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக சமூக வலைத்தளங்களில் கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.