மரக்கறிகளின் விலையில் மாற்றம்!

மரக்கறிகளின் விலையில் மாற்றம்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளுக்கான விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
 

இதன்படி, ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை இன்று 500 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சி 550 ரூபாயாகவும் பச்சை மிளகாய் 700 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
 

மேலும் தக்காளி மற்றும் குடைமிளகாய் கிலோ ஒன்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.