12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி;மூவர் கைது

12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி;மூவர் கைது

கொழும்பு - மீகொடை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் செயற்பாட்டில் மாற்றத்தை அவதானித்த அவர் கல்வி பயிலும் பாடசாலையின் ஆசிரியை இது தொடர்பாக வினவியுள்ளார்.

இதன்போது தாம் இவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்நோக்கியதாக சிறுமி பாடசாலை ஆசிரியையிடம் குறிப்பிட்டுள்ளார்.

12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி;மூவர் கைது | The Fate Of A 12 Year Old Girl Three Arrested

இதனையடுத்து, குறித்த ஆசிரியர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி, 61 வயதுடைய சந்தேகநபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.