யாழில் பாரிய விபத்து! கட்டுப்பாட்டை இழந்து மோதிய அரச பேருந்து.!!

யாழில் பாரிய விபத்து! கட்டுப்பாட்டை இழந்து மோதிய அரச பேருந்து.!!

அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சமிக்கை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில், அதே திசையில் பயணித்த பேருந்து மோதியுள்ளது.

அதிக வேகத்தில் பயணிகளை ஏற்றி வவுனியா நோக்கி பயணித்த பேருந்து மோட்டார் சைக்கிளை மோதிய பின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புதைந்துள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்ற ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆயினும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாரிய விபத்து! கட்டுப்பாட்டை இழந்து மோதிய அரச பேருந்து | Accident Sri Lanka Police Jaffna

அண்மை நாட்களாக அரச பேருந்துகள் அதிக வேகம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் விபத்துக்களை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.