சுற்றுலாப் பயணிகள் உட்பட்ட 9 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

சுற்றுலாப் பயணிகள் உட்பட்ட 9 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

எல்ல – தெமோதரை ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில் 14.02.2024 முற்பகல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 9 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகளும், எல்ல காவல் நிலையத்தின் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள 9 பேரும் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.