கொழும்பு வாழ் மக்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், அவற்றை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுதொர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவிக்கையில்,

பொல்கொட ஆறு முதலைகளின் வாழ்விடமாக உள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீரோடைகளில் பெருமளவிலான முதலைகள் வாழலாம்.

அதன்படி, தியவன்னாவ, போல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை முதலைகளின் வாழ்விடங்களாகக் காணப்படுகின்றன.

எனவே, இந்த நீரோடைகளில் நடந்து செல்லும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.