முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!

முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு, கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதுண்டு. அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா?

காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த நாள் (Kiss day) ஒரு தனிச் சிறப்பினை கொண்டுள்ளது.

முத்தத்தில் பல வகைகள் உள்ளன, அவற்றிற்கு பல அர்த்தங்களும் உள்ளன. நெற்றியில் முத்தம், கன்னத்தில் முத்தம், உதட்டு முத்தம், கையில் முத்தம், உச்சி முகர்ந்து முத்தம் என இப்படி முத்தத்தின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி, முத்ததை பரிமாறிக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல உள்ளன.

முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. கன்னங்களில் முத்தமிடுவது பாசத்தைக் குறிக்கிறது. கைகளில் முத்தமிடுதல் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக கருதப்படுகிறது.

முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்! | Does The Kiss Really Decrease In Fat

காதலுக்குரியவருக்கு தரும் முத்தத்தில், காதல், ஆசை, அக்கறை, காமம், மகிழ்ச்சி, குதூகலம் ஏன் கண்ணீரின் வெளிப்பாடாகவும் கூட இருக்கலாம்.

முத்தம் கொடுப்பதால் உடலில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், பதற்றத்தை குறைக்கவும் முத்தங்கள் உதவுகிறதாம்.

முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்! | Does The Kiss Really Decrease In Fatஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காக செலவிடுவது 306 மணி நேரம் என்று முத்தம் குறித்த ஆராய்சி முடிவுகள் கூறுகிறது. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

முத்தம் முகத்தில் இருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்குகிறது. மேலும், முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது

10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும் போது 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன.

முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்! | Does The Kiss Really Decrease In Fat

ஒரு முத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கலோரிகளையும் எரிக்கவும் முத்தம் உதவுகிறதாம்.

முத்தம் கொடுப்பதன் மூலம் கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும். 

முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா? வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்! | Does The Kiss Really Decrease In Fat