யாழில் மனவிரக்தியால் அரச ஊழியரான பெண் விபரீத முடிவு

யாழில் மனவிரக்தியால் அரச ஊழியரான பெண் விபரீத முடிவு

யாழில் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், அரச ஊழியரான இளம் பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் மனவிரக்தியால் அரச ஊழியரான பெண் விபரீத முடிவு | A Female Civil Servant Death Depression Jaffnaசம்பவத்தில் டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா எனும் அர ஊழியரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்த நிலையில் அதனை அவர் இரத்துச் செய்வதற்கு முயற்சித்ததாகவும் எனினும், முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.