நடிகர் விஜய்யின் இறுதி படம்; வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

நடிகர் விஜய்யின் இறுதி படம்; வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

திரையுலகமே கொண்டாடும் நடிகர் விஜய் தனது இறுதி படத்திற்கு வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்தார்.

இவர் நடிப்பை விட்டு விலகி அரசியலில் இறங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரையில் அவர் நடிக்கவுள்ள படத்தில் நடித்து விட்டு முற்றிலும் அரசியலில் இறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இவர் தற்போது இரண்டு படங்கள் நடிக்கவுள்ளார். ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் Greatest Off All Time ஆகும்.  

மற்றைய திரைப்படமானது தளபதி 69. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தளபதி 69 படத்தை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் எனவும், வெற்றிமாறன், கார்த்திக் சுப்ராஜ், அட்லீ ஆகியோரின் பெரும் அடிப்பட்டு வருகிறது.

இன்னும் சில மாதங்களில் தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடித்தால் நடிகர் விஜய் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறாராம். தற்போது நடித்து வரும் Greatest Off All Time படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதைடுத்து நடிக்கவுள்ள இறுதி படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளமாக வாங்க விஜய் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மையாக தகவல்கள் என்பது தெரியவில்லை.