வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிப்போருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான திட்டம்

வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிப்போருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான திட்டம்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று  (03.02.2024) இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்த பிள்ளைகளுடன் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாடு திரும்பிய பலர் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற முடியாது பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட செயலகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் என்பன இணைந்து நடமாடும் வேலைத் திட்டமாக துரிதமாக பிறப்பு சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையை ஒபர் சிலோன் நிறுவனம் எடுத்துதிருந்தது.

வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிப்போருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான திட்டம் | Citizenship Of 7 Districts Of North Eastஅந்தவகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 51 பேருக்கு பிரஜாவுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதாற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாக இலங்கை பிரஜை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் வவுனியா மாவட்ட அரச அதிபரி பீ.ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி ஆணையாளர் ஈ.எச்.நயனா பிரசங்க, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், ஒப்பர் சிலோன் அமைப்பின்தலைவி சி. சூரியகுமாரி பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.