பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்!

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்!

பூமியை நோக்கி சுமார் வந்துகொண்டிருக்கும் சிறுகோள் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.

அதில், 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

அந்த சிறுகோலானது இன்று (02) பிற்பகல் 2.41 மணிக்கு பூமியை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோளானது, சுமார் 890 அடி விட்டம் கொண்டதாக காணப்படுவதாகவும், அந்த சிறுகோள் பூமியின் மீது மோதும் அபாயம் இல்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்! | Dangerous Asteroid Coming Close Towards The Earth

இது தொடர்பில் அறிவியலாளரான முன்ஜெ கிம் என்னும் தெரிவிக்கையில்.

இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது பூமியை கடந்து செல்லவுள்ளது.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்! | Dangerous Asteroid Coming Close Towards The Earthஅதுதொடர்பில் அதிகம் கவலையடைய தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நமது சூரிய குடும்பத்தில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.