மின்சாரக் கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்சாரக் கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப முடியாது என அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கின்றது.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Regarding Electricity Charges In Slஇலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் இன்று (01) பரிசீலிக்கப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் பிரச்சினை காரணமாக 08 வருடங்களின் பின்னர் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Regarding Electricity Charges In Sl

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்தும் தொனிப்பொருளில் நேற்று கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.