வீடுதேடி சென்று உதவி இயக்குனர்களுக்கு உதவிய ஆதி
மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி, சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ஆதி, லெட்ஸ் பிரிட்ஜ் என்ற அமைப்பின் மூலம் வறுமையில் வாடும் உதவி இயக்குனர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வீடுதேடி சென்று வழங்கி உள்ளார். முகக்கவசம், கையுறை என முறையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அவர்களுக்கு இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக ஆதி கூறியுள்ளார்.
Let's be THE BRIDGE!!#COVID19 pic.twitter.com/HeA9DAGZ16
— LetsBridge (@Letsbridgenow) June 6, 2020