மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், டிபென்டரில் பயணித்த குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடை ஒன்றின் முன் நின்றிருந்த சிலர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.